வகைப்படுத்தப்படாத

ஆர்ப்பாட்டத்தை கைவிட போவதில்லை – ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள்

சூடான் தலைநகர் காட்டூமில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட போவதில்லை என ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் குழு தெரிவித்துள்ளதுடன் இராணுவ ஆட்சி கலைக்கப்படும் வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக குறித்த போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் தொழில் வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டில் இடம்பெறும் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் விரைவில் ஜனநாயக ரீதியான தேர்தல் ஒன்றை நடத்துமாறும் கோரி கடந்த சில நாட்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களால் இதுவரை 108 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அரசாங்கம் இதற்காக இனவாதத்தை தூண்டுகிறது – மஹிந்த ராஜபக்ஸ

සහරාන්ගේ තවත් සමීපතමයෙකු අත්අඩංගුවට

தேசிய அணியைச் சேர்ந்த வீர வீராங்கனைகளுக்கு போஷாக்குக் கொடுப்பனவு