உள்நாடுபிராந்தியம்

ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுதமொன்றினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (19) மாலை பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைபாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருக்கும், மற்றும் ஒரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பத்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

முத்துராஜவுக்கு பதிலாக மூன்று பறவைகளை இலங்கைக்கு வழங்கிய தாய்லாந்து!

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 665 ஆக அதிகரிப்பு