சூடான செய்திகள் 1

ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

(UTV|COLOMBO)-கோப்பாய், சுன்னாகம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காணி பிரச்சினை தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுன்னாகம், வடக்கு உரெழு பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 5 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் அப்பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மேலும் ஒருவருக்கு கொரோனா; 417 ஆக உயர்வு

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்று

விசேட அமைச்சரவை கூட்டம் இன்று