வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் பலர் பலி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். குந்தூஸ் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளின் முகாமில் இன்று அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகளின் முகாம் மீது ராணுவ விமானங்கள் குண்டு வீசியுள்ளன. இதில் 30 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ‘‘ஆப்கானிஸ்தான் ராணுவம் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது அப்பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 30 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை”, என அவர் கூறினார்.

ஆனால் இந்த தாக்குதல் அப்பகுதியில் செயல்பட்டு வந்த மத நல்லிணக்க பள்ளி மீது நடத்தப்பட்டதாகவும், அதில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் தலிபான் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

One-day service resumes – Registration of Persons Dept.

Kandy SC produce ‘Sevens’ masterclass to be crowned champions

க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை