உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்த நிலையில், அதிகாலை உறங்கிக்கொண்டிருந்த பலரும் வீடுகளை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி ஆப்கானிஸ்தானில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டிரம்ப் மீது 05 முறை துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார் ?

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

சீன படைகளுடன் மோதல் ஏற்பட்ட லடாக்கிற்கு மோடி திடீர் விஜயம்