உலகம்

ஆப்கானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து டெல்லிக்கு வந்த 13 வயதுடைய சிறுவன்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

விசாரணைக்குப் பிறகு, குறித்த சிறுவன் அதே விமானத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

காபூலிலிருந்து புறப்பட்ட கே.ஏ.எம் (KAM) விமானம், இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

அப்போது, விமானத்தின் சக்கரப் பகுதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கண்டனர்.

அவனை விசாரித்தபோது, தான் விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து வந்ததாகத் தெரிவித்தான்.

சிறுவன் ஒளிந்திருந்த பகுதியைச் சோதனையிட்டபோது, அங்கு ஒரு சிறிய ஒலிபெருக்கி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், விமானம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், எந்தவிதமான சதிச் செயல்களும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

விசாரணைக்கு பின்னர், அந்தச் சிறுவன் மீண்டும் அதே விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

ஜப்பான் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவு

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிடியாணை பிறப்பிப்பு!

editor