உள்நாடு

ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்!

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, கம்மல்தொட்டபொல கடற்கரையில் இன்று (14) காலை முச்சக்கர வண்டிக்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர் நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் 56 வயதான பொலிஸ் சார்ஜன்ட் சாரதியும், நீர்கொழும்பு தலுபத பகுதியைச் சேர்ந்தவருமான ஜெயந்த புஷ்பகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் கொச்சிக்கடை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி, கொச்சிக்கடை பொலிஸாரும் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகமும் தற்போது விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.

இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து தற்போது எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

நீதவானின் விசாரணைக்குப் பின்னர் சடலம் நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் அடையாளம்

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக திலித் ஜயவீர

editor

 தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு