சூடான செய்திகள் 1

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 7 ​பெண்கள் விபத்தில் படுகாயம்

(UTVNEWS | COLOMBO) – புத்தளம்- கறுவலகஸ்வெவ பகுதியில், இன்று(23) காலை இடம்பெற்ற விபத்தில் 7 ​பேர் படுகாயமடைந்துள்ள நிலையில்,புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றுடன், இராணுவ பஸ் ஒன்று மோதுண்டதில், வானில் பயணித்த பெண்கள் விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி, இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் சிப்பாய்களுடன் பயணித்த பஸ், முன்னால் பயணித்த குறித்த வானை முந்திச் செல்ல முற்பட்டபோதே, விபத்து நேர்ந்துள்ளதாக, பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கறுவலகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் உள்ளிட்ட 09 நிறுவனங்கள் கோப் குழு முன்னிலையில்

தெல்தெனிய கொலை சம்பவம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு