உள்நாடு

‘ஆசியாவின் ராணி’ தொடர்பான கலந்துரையாடல் இன்று

(UTV | கொழும்பு) – இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட’ஆசியாவின் ராணி’ என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல் தொடர்பில் இன்று (13) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மற்றும் இரத்தினக்கல் உரித்தான தனியார் நிறுவனத்தின் அதிகாரிகளின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

ஆசியாவின் ராணியென அழைக்கப்படும் குறித்த நீலக்கல் இரத்தினபுரி – பலாங்கொட பிரதேசத்தில் உள்ள சுரங்கமொன்றில் இருந்து 6 மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அது தொடர்பான பல தகவல்கள் நேற்று (12) வெளியாகின.

இது ஜெமோலாஜிக்கல் இன்ஸ்டிட்யூட் மற்றும் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றைப் படிகத்தினால் ஆனமையால் அதிக மதிப்புமிக்க இந்த நீலக்கல் சுமார் 15 இலட்சம் கரட் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசியல் அமைப்பில் இருந்தும் கூட அமுல்படுத்தப்படவில்லை – சிவாஜிலிங்கம்

editor

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 4 % ஆல் குறைப்பு

editor

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!