வகைப்படுத்தப்படாத

ஆகஸ்ட் 14-ம் திகதிக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்பு

(UTV|PAKISTAN)-5 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான் கான், அவை ஐந்திலுமே வெற்றி பெற்றுள்ளார். இம்ரான் கட்சியின் சார்பில் கைபர் பக்துங்கவா மாகாணத்தின் முதல் மந்திரியாக முன்னர் பொறுப்பேற்றிருந்த பர்வேஸ் கட்டாக் என்பவர் இந்த தேர்தலில் பாராளுமன்றத்துக்கும் கைபர் பக்துங்கவா சட்டசபைக்கும் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி  பெற்றுள்ளார்.

இதுமட்டுமின்றி, கைபர் பக்துங்கவா மாகாணத்தில் 66 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அங்கு மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. முதல் மந்திரியாக  பர்வேஸ் கட்டாக்-கை மீண்டும் நியமிக்க இம்ரான் கான் தீர்மானித்துள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் உள்துறை மந்திரி நிசார் அலி கான் சவுத்ரியை எதிர்த்து போட்டியிட்ட இம்ரான் கட்சி வேட்பாளரான குலாம் சர்வார் கான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றதுடன் மேலும் ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் வென்றுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஆங் சான் சூகியின் விருது மீளப்பெறப்பட்டது

Princess Haya: Dubai ruler’s wife in UK ‘in fear of her life’

Thirteen acquitted in Trincomalee murder trial