உள்நாடு

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

அஹுங்கல்லவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லக்ஷான் மதுஷங்க என்ற 28 வயதான இளைஞர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் அவரின் இடுப்புப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியால் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது!

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை