விளையாட்டு

அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி

(UTVNEWS|COLOMBO) – உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் அவுஸ்திரேலிய அணியுடன் நேற்று(15) இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி, 87 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 335 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 45.5 ஓவர்களில் 247 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

நேற்றைய போட்டிகளின் பின்னர், உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி, 8 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதேவேளை, இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று(16) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Related posts

முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிகள்- 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண்

50 ஓட்டங்களால் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு

editor