உள்நாடு

அவசர பராமாிப்புக்காக தனியார் மின் உற்பத்தி நிலையதிற்கு அனுமதி கோரல்

(UTV | கொழும்பு) – களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்திற்கு அருகில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையமொன்றினால் அவசர பராமரிப்புக்காக அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி கிடைத்தால் தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்திருந்தார்.

அதனூடாக மேற்படி தனியார் மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக தேசிய மின் கட்டமைப்புக்கு 160 மெகாவோட் மின்சாரத்தை வழங்க முடியும்.

மின்சாரம் துண்டிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

துறைமுக தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்!

மின்சார பஸ்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்!

நீர் கட்டணம் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு