சூடான செய்திகள் 1

அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

(UTV|COLOMBO) நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்கான அவசரகால சட்டத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.

நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விடயங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை பேணுவதற்காகவே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் ஒருவருக்கான தகைமை ரணிலிடம் இல்லை-முன்னாள் ஜனாதிபதி

இராணுவ தளபதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.