உள்நாடுகேளிக்கை

அலெக்சாண்டர் பெர்ணான்டோ காலமானார்

(UTV| கொழும்பு) –மூத்த நடிகரான அலெக்சாண்டர் பெர்ணான்டோ இன்று காலமானார்.

சிங்கள சினிமா துறையில்  50 வருடத்திற்கு மேலாக பங்களிப்பு செய்துள்ள அவர், 100க்கும் அதிகமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் றாகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related posts

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளைச் சந்தித்தார் சஜித் பிரேமதாச

editor

மூத்த நடிகர் செல்லத்துரை மறைந்தார்

பேருவளையில் 11 கொரோனா நோயாளிகள் அடையாளம்