அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்திய மூர்த்தியினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனார்.

Related posts

ஐஸ் போதைப்பொருளுடன் டுபாய் சுத்தாவின் உதவியாளர் கைது

editor

புலனுறுப்புகளால் உலக சாதனை படைத்த சாய்ந்தமருது பர்ஷான்க்கு கௌரவம்

மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லை – வெறும் பேச்சு, பொய்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – சஜித் பிரேமதாச

editor