வகைப்படுத்தப்படாத

அரச பேருந்து இயக்குனர்கள் வேலை நிறுத்தம்

(UTV|COLOMBO)-அரச பேருந்து சேவைகள் அனைத்தும் வடக்கு மாகாணத்தில் இன்று காலை தொடக்கம் ஸதம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை முதல் ஆரம்பித்தனர்.

வட பிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடன் இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் பேருந்துகள் எதுவும் இல்லை. அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாதிருக்க பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Kalu Ganga rising to flood level

டிரம்ப் மற்றும் கிம் சந்திப்புக்காக ரூ.81 கோடி செலவு செய்த சிங்கப்பூர்

“Youth must act responsibly with their vote” – Dilum Amunugama