உள்நாடு

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி புதிய பாதைக்கு கொண்டு செல்வதுதான் எனத் தெரிவித்தார்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் பொது அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்பங்களை அங்கீகரிக்கும் நிகழ்வில் நேற்று (15) பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.

மக்கள் எதிர்பார்க்கும் திறமையான பொது சேவையை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும், இந்த புதிய தொழில்நுட்பத்தை கிராம சேவையாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

அலுவலகப் பணிகளை எளிதாகவும் வினைத்திறனாகவும் மாற்றுவதற்காக, 2006 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின்படி, உள்நாட்டலுவல்கள் பிரிவின் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அதிகாரிகளின் கையொப்பங்களை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறை இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் விதிகளின்படி டிஜிட்டல் கையொப்பங்களை வழங்கும் அதிகாரம் கொண்ட நிறுவனமாக லங்காபே LankaPay உள்ளது.

அதன்படி, கடிதங்களைச் செயலாக்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கலாம் மற்றும் மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

10 நாட்களில் 578 அரிசி தொடர்பான சுற்றிவளைப்புகள்

editor

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒன்லைன் சட்டம்!

மன்னாரில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம் – சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

editor