உள்நாடு

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் – ஐவர் கொண்ட குழு நியமனம்

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க தலைமை நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவில் தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய, நீதிபதிகளான புவனேக அலுவிகாரே, சிசிர டி ஆப்று, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித மல்லல்கொட ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி பரிசீலிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டுப்பாட்டை இழந்து வேன் விபத்தில் சிக்கியது – கணவன், மனைவி பலி

editor

இவ்வாண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை வெளியேற்றிய ஐ டி எம் என் சி சர்வதேச கல்விநிறுவனம்!

ஊடகத்துறை அமைச்சாின் அறிவித்தல்