அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அரசாங்கம் சட்டம் ஒழுங்கினை சரியாக நிலைநாட்டி வருகின்றது – இளங்குமரன் எம்.பி

மக்களை ஏமாற்றி, மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் முகமாக கதவடைப்புப் போராட்டம் போன்ற தேவையற்ற செயற்பாடுகளில், அரசியல் இலாபம் தேடும் சிலர் ஈடுபட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியினால், வெள்ளிக்கிழமை வடக்கு –  கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த இளங்குமரன் எம்.பி, 

அண்மையில் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

எமது அரசாங்கமானது சட்டம் ஒழுங்கினை சரியாக நிலைநாட்டி வருகின்றது. குறிப்பாக சட்டம் என்பது அனைவருக்கும் சமமான ஒன்று என குறுப்பிட்டுள்ளார்.

Related posts

உலகக் கிண்ண ஆட்ட நிர்ணயம் : வீரர்கள் குறித்து எந்த ஆதாரமும் இல்லை

சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் ஏற்படும் பாதிப்பு

editor