அரசியல்உள்நாடு

அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும் – சஜித் பிரேமதாச

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்துள்ளார்.

தலவாக்கலையில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறைகூவலை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அநுர அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது என எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியவர்கள், இன்று மக்களை ஏமாற்றுகின்றனர்.

எனவே, இந்த அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுப்பதற்காக, உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

மக்களை எல்லா வழிகளிலும் ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்துக்கு உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்.

நாட்டு மக்களுக்கு உப்பைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்களே ஆட்சிபீடத்தில் உள்ளனர்.

நாட்டில் சட்டம், ஒழுங்கு அமுலில் இல்லை. பாதாளக்குழுக்கள் சட்டத்தைக் கையிலெடுத்துள்ளன. வீட்டுக்குள்ளும், நடுத்தெருவிலும் கொலைகள் இடம்பெறுகின்றன.

நீதிமன்றத்துக்குள்கூட துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் நிலைமைக் காணப்படுகின்றது. காட்டாட்சியே நாட்டில் நிலவுகின்றது. என்றார்.

-கிரிஷாந்தன்

Related posts

BOI தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பு

தொடர்ந்தும் இந்த அரசாங்கம் ஏமாற்றும் வேளையையே செய்து வருகின்றது – சஜித் பிரேமதாச

editor

போதைப்பொருள் கடத்தல் : உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது