அரசியல்உள்நாடு

அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த வத்திக்கான் தூதுவர்!

இலங்கையின் வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரயன் உடெய்க்வே, தனது பதவிக்காலம் முடிவடைந்து புறப்படுவதற்கு முன்பு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெரத்தை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பானது இன்று (21) அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

2020 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான வத்திக்கான் தூதுவராகப் பணியாற்றி வரும் தூதுவர் பேராயர் பிரயன் உடெய்க்வே, இலங்கையில் இருந்த காலமானது மறக்க முடியாத நிகழ்வுகளால் நிறைந்த காலம் என்றும், இலங்கை மிக அழகான நாடாக நீண்ட காலம் தனது நினைவில் இருக்கும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத்திடம் தெரிவித்தார்.

வத்திக்கானில் நடைபெற்ற பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் அமைச்சர் பங்கேற்றதற்காக வத்திக்கானின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத்துக்கு தூதுவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து வெளியேறும் வத்திக்கான் தூதுவருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், வத்திக்கான் எப்போதும் இலங்கைக்கு இணக்கமான முறையில் செயல்பட்டு வருவதாகவும், அதற்காக இலங்கை அரசாங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

எத்தியோப்பியாவிற்கான வத்திக்கான் தூதுவராக எதிர்காலத்தில் பொறுப்பேற்கவுள்ள பேராயர் பிரயன் உடெய்க்வேக்கு, அமைச்சர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Related posts

பொருளாதார நெருக்கடியின் போது ஒத்துழைப்பு வழங்கியமைக்கு ஜனாதிபதி அநுர சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பு

editor

பிரித்தானிய பெண்ணின் காணாமல் போன பணப்பை கண்டுபிடித்து கொடுத்த பெண் பொலிஸ் அதிகாரிகள்

editor

கால்நடைகளை வேட்டையாடிய முதலையை நள்ளிரவில் மடக்கிப் பிடித்த மக்கள்

editor