உள்நாடு

அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை – பிரதமர்

(UTV | கொழும்பு) –  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அமைச்சர்களின் சம்பளத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் தாங்கள் அனுபவிக்கும் அமைச்சுச் சலுகைகளை மட்டுப்படுத்தவும் தீர்மானித்துள்ளதாக பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, போதியளவு எரிவாயு சிலிண்டர்கள் நேற்று இறக்கி வைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் உறுதியளித்த போதிலும், அதனை நிறைவேற்றத் தவறியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அபிவிருத்தி தொடர்பில் விளக்கமளிக்குமாறு லிட்ரோ நிறுவன தலைவருக்கு பணிப்புரை விடுத்ததாகவும், அதேவேளை பொது நிறுவனங்களுக்கான குழு விசாரணைகளுக்காக லிட்ரோ எரிவாயு நிறுவன அதிகாரிகளை அழைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

Related posts

மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவு

இஸ்ரேலின் எந்த ஈனச்செயல்களும் முஸ்லிம்களின் ஈமானை அழித்துவிடாது – இறுதி வெற்றியும் எமக்கே – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ரிஷாட் பதியுதீன் எம்.பி

editor

மாணவர்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்!