வகைப்படுத்தப்படாத

அமேசான் நிறுவனத்தில் பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்

(UTV|AMERICA)-அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அமேசான் நிறுவனம் சூப்பர் மார்க்கெட்டை நேற்று அறிமுகம் செய்தது. ‘அமேசான் கோ’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.

இங்கு வாங்கும் பொருட்களுக்கு ‘கியூ’ வரிசையில் நின்று பில் போட வேண்டியதில்லை. சூப்பர் மார்க்கெட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மேலே வைக்கப்பட்டிருக்கும் கேமரா மற்றும் சென்சார்கள் வாடிக்கையாளரை அடையாளம் கண்டு அவர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் திரும்ப வைக்கும் பொருட்களை பதிவு செய்யும். பின்னர் அவர்கள் வெளியே செல்லும்போது பொருட்களுக்கான தொகை கணக்கிடப்பட்டு அவர்களின் கிரெடிட் கார்டில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.

முன்னதாக அமேசான் கோ சூப்பர் மார்க்கெட்டின் தரை தளத்துக்கு செல்லவேண்டு. அங்கு ஸ்மார்ட்போனில் அமேசான் கோ என்ற செயலி மூலம் வாடிக்கையாளர்கள் ‘கியூ ஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி அமேசான் கோ சூப்பர் மார்க்கெட் ஊழியர்களுக்காக சோதனை அடிப்படையில் திறக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை

Former chairman of ‘Rakna Lanka’ arrested

ව්‍යාජ අමරිකානු මුදල් සමඟ සැකකරුවෙක් අත්අඩංගුවට