உலகம்

அமெரிக்க பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதம்

அமெரிக்க பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதம்
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப் நேற்று (15) கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, “அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருக்கிறது.

வரி இல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா விருப்பம் தெரிவித்தது” என்று பேசினார்.

மேலும் இனிமேல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஐ-போன்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு ட்ரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார்.

சர்வதேச அழுத்தம் காரணமாக பின் அந்த வரிவிதிப்பை தாற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தியா வரியை மொத்தமாக நீக்க சம்மதித்துள்ளது என்று ட்ரம்ப் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா மட்டுமே எதிர்வரி விதித்து எதிர்வினை ஆற்றியது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் 36,000 ஊழியர்கள் பணி இடைநீக்கம்

மலேசியா விமான நிலையத்தில் வாயு கசிவு

BRAKEING NEWS = காஸாவில் மீண்டும் போரை தொடங்கியது இஸ்ரேல்