உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு இஸ்ரேலின் உயர் விருது அறிவிப்பு

இஸ்ரேல் பயணமான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு இஸ்ரேலிய அரசின் உயர்பாட்ட விருதான இஸ்ரேலிய ஜனாதிபதி பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

ஹமாஸ் அமைப்பினால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 48 பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கு அவர் எடுத்த முயற்சியை அங்கீகரித்தே இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இஸ்ரேல் ஜனாதிபதி இசாத் ஹர்சொக் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் ட்ரம்புடன் நேற்று நடந்த சந்திப்பில் அறிவித்துள்ளார். இதற்கான பதக்கம் எதிர்வரும் மாதங்களில் ட்ரம்பிடம் வழங்கப்படவுள்ளது.

இஸ்ரேல் இதற்கு முன்னர் 2013 இல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு இந்த விருதை வழங்கி இருந்தது.

Related posts

ரஷ்யாவில் நிலநடுக்கம்

editor

எனக்கு நோபல் பரிசு தர வேண்டும் – அடம்பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

editor

இத்தாலி ஜெட் விமான விபத்தில் எட்டு பேர் பலி