சூடான செய்திகள் 1

அமெரிக்கா விலகினாலும் இலங்கைக்கு நெருக்கடியே

(UTV|COLOMBO)-அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகியுள்ள நிலையில், அதனைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து விடுபடமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி தயான் ஜெயதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு இஸ்ரேல் விடயத்தில் பக்கச்சார்பாக நடந்துக் கொள்வதாக குற்றம் சுமத்தி அதில் இருந்து அமெரிக்கா கடந்த தினம் வெளியேறியது.

ஆனால் இலங்கை சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அத்துல்கெசாப் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்திருந்தார்.

அதேநேரம், அமெரிக்காவின் இந்த வெளியேற்றம் இலங்கைக்கு சாதமான நிலைமையை தரும் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறி இருந்தார்.

எவ்வாறாயினும், இந்த சூழ்நிலையைப் பயன்டுத்தி இலங்கை மனித உரிமைகள் பேரவையில் எதிர்கொண்டுள்ள நெருக்கடியில் இருந்து விடுபட முடியாது என்று தயான் ஜயதிலக கூறியுள்ளார்.

மாறாக, மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவைப் பெற்று, தற்போதுள்ள ஜெனீவா பிரேரணையை இரத்து செய்து, புதிய பிரேரணை ஒன்றை இலங்கை முன்வைக்குமாக இருந்தால், இந்த நெருக்கடியில் இருந்து விடைபெற வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

ஜனாதிபதி சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் இன்று கண்டியில் மக்கள் பேரணி