வகைப்படுத்தப்படாத

அமெரிக்கா விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் நாடு திரும்பினார்

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை நாடு திரும்பினார்.

இன்று மாலை 3.55 மணியளவில் பிரதமர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த விஜயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மற்றும்  பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் பட்ரீசியா ஸ்கொட்லன்ட் ஆகியோரை  சந்தித்தார்.

நிவ்யோர்க்கில் அமைந்துள்ள இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி காரியாலயத்தில் பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கை மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் நெருக்கம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் பெட்டீரிசியா ஸ்கொட்லன்டை இலங்கை வருமாறு பிரதமர் இந்த சந்திப்பின் போது அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக விசேட நிதியம்

ஏனைய மீனவர்களுக்கும் PCR பரிசோதனை

Parliamentary Select Committee to convene today