வகைப்படுத்தப்படாத

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பணி நீக்கம்

(UTVNEWS|COLOMBO)- அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து வந்த ஜோன் போல்டனை (John Bolton) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணியிலிருந்து நீக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரான் மற்றும் வடகொரியா விவகாரத்தில் அதிபர் டொனால் டிரம்ப் மீது, ஜோன் போல்டன் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனை பணிநீக்கம் செய்துவிட்டதாகவும், அடுத்த வாரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

Related posts

காங்கிரஸ் கட்சியில் முதன்முறையாக பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு

மஹிந்த, ஜப்பான் சென்றார்

රජයේ ආයතනවල වියදම් අවම කරන ලෙස චක්‍රලේඛයක් නිකුත් වේ