உலகம்

அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை

(UTV|கொவிட்-19) – அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை எதிர்கொள்ளவும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கவும் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளதாக ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தற்போது 792,913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 42,517 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்ய அரசு நவல்னிக்கு எதிராக புதிதாக விசாரணைகள் ஆரம்பம்

இஸ்ரேல்- ஈரான் தாக்குதலை கண்டிக்கும் அமெரிக்காவின் MP

கொரோனா தொற்றினால் இதுவரை 402,237 பேர் உயிரிழப்பு