உலகம்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்தும் நடவடிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து எடுத்து வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன், சட்டவிரோத குடியேற்றச் சட்டத் திருத்தத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

அதன்படி, சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணி அமெரிக்கா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 44 ஊழியர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 44 பேருக்கு ஆதரவாகவும், ட்ரம்ப் குடியேற்றச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஜூன் 7ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டு பேரணியாக சென்றனர்.

அப்போது அவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். அவர்கள் மீது தடியடியும் நடத்தியதால் போர்களமாக காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு ஆதரவாகவும், ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்களும் வெகுவாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்தும், பொது சொத்துக்களும் சேதமாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக தொடர்ந்து 4ஆவது நாட்களாக லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது.

இந்த போராட்டத்தை கட்டுப்படுத்து நகர் முழுவதும் என்.ஜி எனப்படும் தேசிய காவல் படை பொலிஸாரரை அனுப்பி வைத்து ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவோர் இரவு நேரங்களில் கடைகளை கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுவதால் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

editor

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor

இணையத்தைக் கலக்கும் ‘புளூபெரி சமோசா‘!