அரசியல்உள்நாடு

அபிவிருத்தியடையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் வகையில் 150 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சிகிச்சை மற்றும் கட்டணம் செலுத்தும் வாட் கட்டிடத்தொகுதி என்பன மக்கள் உரிமைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு நேற்று (18) இடம்பெற்றது.

இதன்போது கட்டணம் செலுத்தப்பட்ட வாட் தொகுதியின் இயன்மருத்துவ பிரிவும் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை மற்றும் அதனை அண்மடித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு செயற்தினுடன் கூடிய மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் குறித்த வைத்தியசாலை பணிக்குழு பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதை அமைச்சர் இதன்போது பாராட்டினார்.

எதிர்காலத்தில் வைத்தியசாலைக்கு தேவையான மனிதவள மற்றும் பௌதீக வளங்களை கட்டம் கட்டமாக பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts

சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்த ஜனாதிபதி ரணில்

editor

பல கோடி தங்கத்துடன் யாழில் இருவர் கைது [PHOTO]

பிரதமர் நாளை இந்தியா விஜயம்