அரசியல்உள்நாடுபிராந்தியம்

அன்வரின் உறுப்புரிமையை நீக்கும் வழக்கு தள்ளுபடி – மீண்டும் மூக்குடைபட்ட மு.கா!

கடந்த உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியூடாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஓட்டமாவடி 01 ஈம் வட்டாரத்தில் போட்டியிட்டேன்.

குறித்த தேர்தலில் நான் போட்டியிட்ட வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் இரு முறை பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்களும் களமிறங்கி இருந்தார்.

ஓட்டமாவடி 1 ஆம் வட்டார தேர்தல் களத்தில் எனக்கும் அவருக்குமிடையில் கடுமையான போட்டி ஏற்படுத்தப்பட்டாலும் மக்கள் என்னோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் சவால்களை, நெருக்கடிகளை எதிர்கொண்டு இறைவன் உதவியால் அதிகளவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.

அல்ஹம்துலில்லாஹ்.
ஆனாலும், எனது வெற்றியை ஜீரணித்துக் கொள் ளமுடியாத நிலையில் சட்டத்தரணி ஹபீப் றிபான், எனது உறுப்புரிமையை இரத்துச்செய்யுமாறு கோரி எனக்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கள் செய்தார்.

குறித்த வழக்கினூடாக நான் ஓட்டமாவடி பிரதேச சபை அமர்வில் கலந்து கொள்வதைத்தடுக்கும் தடையுத்தரவை கோரிய போதும் அது நிராகரிக்கப்பட்டு வழக்கு தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டுவந்தது.

நான் ஓட்டமாவடி பிரதேசத்தி பிறந்து வளர்ந்தவன். எனது உடமைகள் ஓட்டமாவடி பிரதேசத்தில் இருக்கிறது. நான் கடந்த தேர்தலிலும் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் தொடராக என்னாலான பணிகளை அம்மக்களுக்கு செய்திருக்கிறேன் என்ற போதும், நான் வாழைச்சேனை பிரதேசத்தில் திருமணம் முடித்து வசித்து வருவதை காரணங்காட்டி எனது உறுப்புரிமையை இரத்துச்செய்ய முயற்சித்த சம்பவங்களை அறிந்த எனது வட்டார மக்கள் மாத்திரமின்றி வாழைச்சேனை பிரதேச மக்களும் இதனால் அசௌகரியம் அடைந்தார்கள்.

என்னை நீக்கிவிட்ட குறித்த வெற்றிடத்திற்கு தான் வரவேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயற்பட்டாலும், நீதி வெல்லும் என்ற நம்பிக்கையில் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு இறைவனை நம்பியவனாக முன்னோக்கி நகர்ந்தேன்.

அதன் விளைவாக இறைவன் உதவியால் நீதிமன்ற தீர்பினூடாக நான் தொடர்ந்தும் ஓட்டமாவடி பிரதேச சபையின் உற்ப்பினராக செயற்பட அனுமதி கிடைத்திருக்கிறது.

இது வரலாற்று வெற்றியாக,குறுக்கு வழியில் வெற்றியை சுவைக்கமுனைந்தவருக்கு பேரடியாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

அல்லாஹுக்கே புகழ் அனைத்தும்
மக்களால் நிராகரிக்கப்பட்டு, மக்களின் ஆதரவை பெற்ற பிரதிநிதியை நீக்க எடுத்த முயற்சி தோல்வியடைந்தாலும், இத்தகைய மோசமான செயலை முன்னெடுத்தவர்களுக்கு எதிர்காலத்திலும் மக்கள் தகுந்தபாடம் கற்பிப்பார்கள் என்று நம்புகிறேன்.

மேலும் எனக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டபோது எனக்கு துணைநின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவர் றிஷாத் பதியுதீன், தவிசாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் என் உறவுகள், ஓட்டமாவடி 1ஆம் வட்டார மக்கள், வாழைச்சேனை பிரதேச மக்கள், இவ்வழக்கில் என் சார்பாக முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், கட்சிக்கு அப்பால் என்னை நேசித்த நல்லுள்ளங்கள்,
அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வண்ணம்,

எம்.டீ.எம்.அன்வர்,
பிரதேச சபை உறுப்பினர்
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி

Related posts

அஷ்ரபை பண்டப்பொருளாக கூவி விற்கும் அரசியலை, உடன் ஹரீஸ் எம்.பி. கைவிட வேண்டும் – ஆசாத் சாலி

வெங்காயத்திற்கான விலை அதிகரிப்பு

பிரதமர் உள்ளிட்ட அனைவரும் பதவி விலக வேண்டும்