உள்நாடு

அனைத்து பாடசாலைகளுக்கும் ஒருவாரம் விடுமுறை

(UTV | கொழும்பு) –  ஜூலை 04ம் திகதி முதல் 2022 ஜூலை 08ம் திகதி வரை, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வாரமாக அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த பின்னர், கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று 03.07.2022 நடைபெற்ற கலந்துரையாடலில், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சில் எரிபொருள் விநியோகம் குறித்த அறிவிப்புகள் மேலும் கவனத்தில் கொண்டு, 04.07.2022 முதல் 08.07.2022 வரையிலான வாரம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் பாடசாலை நேரம் இழக்கப்பட்டால், அடுத்த பாடசாலை விடுமுறை காலத்தில் அவை ஈடுசெய்யப்படும்.

Related posts

வேலையற்ற இளைஞர்களினூடாக உற்பத்திப்பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகள்!

திருடர்களின் ஆதரவில்லாமல் நாட்டு மக்களின் ஆதரவுடன் நாட்டின் பொறுப்புக்களை கையேற்பேன் – சஜித்

editor

பள்ளிவாசல்களை அரசியல்வாதிகள் கையகப்படுத்துவது மிகவும் ஆபத்தானது – முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம்

editor