உள்நாடுசூடான செய்திகள் 1

“அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வரிக் கோப்புகள் திறக்கப்படும்” ரஞ்சித் சியம்பலாபிட்டிய

(UTV | கொழும்பு) –

அரசியலில் பிரவேசிக்கும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் முதல் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வரிக் கோப்புகள் திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் பிரவேசிக்கும் உள்ளுராட்சி பிரதிநிதிகள் முதல் மேல்நிலைப் பிரதிநிதிகள் வரை அனைவரும் இனிமேல் தமது வரிக் கோப்புகளைத் திறப்பது கட்டாயமாகும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, பதினான்கு பிரிவுகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் வரிக் கோப்புகளைத் திறக்க வேண்டிய வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டார், மேலும் அந்த நான்கு பிரிவுகளில் அரசியல்வாதிகள் சேர்க்கப்படாதது சமூகத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வேலையை இழந்த 20,000 ஆடைத் தொழிலாளர்கள்!

கல்வித்துறை மேம்பாட்டுக்கு உடனடி மாற்றங்கள்

தரமற்ற சுகாதார சேவையில் இலங்கை 51வது இடம்…