உள்நாடு

அனர்த்த நிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு – 2 பேர் பலி – 20,300 பேர் பாதிப்பு

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மழை, வெள்ளம் காரணமான அனர்த்தங்களால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மலபட்டாவ பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹங்குரன்கெத்த ஊடாக கண்டிக்குச் செல்லும் வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சீரற்ற வானிலை காரணமாக, பாறைகள் சரிந்து விழும் அவதான நிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை வீதி மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் [VIDEO]

மேலும் 826 கடற்படையினர் குணமடைந்தனர்

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பான அறிவிப்பு!