அரசியல்உள்நாடு

அனர்த்தத்தில் அரசியல் செய்வதை கைவிடவும் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

இயற்கை பேரனர்த்தத்தை வைத்து அரசியல் செய்வதை கைவிடுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சில, அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்;

இயற்கை பேரழிவில்,அரசியல் செய்வதற்கு சில எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.

இவ்வாறான அற்ப சிந்தனைகளில் எவரும் செயற்படக்கூடாது.

நாடு முழுவதிலும் அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரனர்த்தம் வரலாற்றில் பெரும் அழிவாகப் பதியப்பட்டுள்ளது. இந்தப் பேரிடரில் பலர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காணாமலாகியுள்ளனர். மேலும்,பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தப் பேரனர்த்தத்தை வைத்து அரசியல் செய்வதில் சில எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன.

இப்படியான நடவடிக்கையை கைவிடுமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்

கொள்கிறேன்.நடந்தது இயற்கைப் பேரனர்த்தம். இதற்கு அரசு மீது குற்றம் சுமத்த முடியாது.

இந்தப் பேரழிவில் இருந்து இலங்கை மீண்டெழ உதவுமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இயற்கைப் பேரனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை அமைப்பு, 250 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.

Related posts

பாதாள குழுக்களுடன் நான்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு தொடர்பு – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

சட்டமா அதிபரின் அறிக்கை தொடர்பில், CID இடம் அறிக்கை கோரல்

‘சீனாவுடன் கடன் மறுசீரமைப்பிற்கு இலங்கை உடனடியாக செல்ல வேண்டும்’