விளையாட்டு

அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை சுவீகரித்த குரோஷிய அணியின் லூகா

(UTV|COLOMBO)-சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின், ஆண்டின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதை குரோஷிய அணியின் நட்சத்திர வீரரான லூகா மொட்ரிச் சுவீகரித்தார்.

போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, எகிப்து அணியின் மொஹமட் சாலா உள்ளிட்டோரை வீழ்த்தியே அவர் இந்த விருதை சுவீகரித்தார்.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்த விருது வழங்கல் விழா லண்டனில் கோலாகலமாக நடைபெற்றது.

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் அதிபிரசித்தி பெற்ற வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அதிகாரிகள் இந்த விருது வழங்கல் விழாவில் பங்கேற்றனர்.

ஆண்டின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதுக்காக போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, எகிப்திய அணியின் மொஹமட் சாலா குரோஷியாவின் லூகா மொட்ரிச் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

விருது வழங்கல் விழாவில் குரோஷியாவின் லூகா மொட்ரிச் ஆண்டின் அதிசிறந்த வீரர் விருதை சுவீகரித்தார்.

சம்பியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டத்தொடரில் ரியல் மெட்ரிட் அணி சம்பியன் மகுடம் வெல்வதற்கு லூகா மொட்ரிச் பாரிய பங்காற்றினார்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரில் குரோஷியாவை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற பெருமையும் லூகா மொட்ரிச்சை சாரும்.

உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் குரோஷியா முதல் தடவையாக இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தமையும் இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது.

ஆண்டின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனைக்கான விருதை பிரேஸில் அணியின் மேடா வியடா லா சில்வா (Orlando Pride ) தனதாக்கினார்.

உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரில் சம்பியன மகுடம் சூடிய பிரான்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளரான டிடியா டிஸ்செப்ஸ் ( Didier Deschamps ) ஆண்டின் அதிசிறந்த பயிற்றுவிப்பாளருக்கான விருதை வெற்றிக் கொண்டார்.

ஆண்டின் அதிசிறந்த கோலுக்கான விருது எகிப்து அணியின் மொஹமட் சாலா வசமானது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களால் வெற்றி!

காற்பந்து விளையாட்டு ஜாம்பவன் பீலே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

சனத் இனது தடைக்காலம் நிறைவுக்கு