உள்நாடுபிராந்தியம்

அதிக வேகத்தில் சென்று விபத்தை ஏற்படுத்த முயற்சித்த தனியார் பேருந்தின் சாரதி

ஹட்டன்–பொகவந்தலாவ பிரதான வீதியின் தியசிறீகம பகுதியில், இன்று (14) காலை, இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து பொகவந்தலாவிலிருந்து ஹட்டன் நோக்கி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தது.

அப்போது, நல்லதன்னியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பேருந்து, போட்டியிடும் வகையில் அதிக வேகத்தில் சென்று SLTB பேருந்தை முந்தி செல்ல முயன்றது.

இதன் விளைவாக, விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பயணிகள் கூறுகையில், தனியார் பேருந்தின் சாரதி, SLTB பேருந்தை முந்துவதற்காக ஆபத்தான முறையில் வேகமெடுத்து முன்னால் செல்ல முயன்றதால், விபத்து ஏற்படவிருந்ததாக கூறுகின்றனர்.

இந்தச் சம்பவத்தின் காட்சிகள், பயணிகளின் ​கெமராவில் பதிவாகியுள்ளன.

மேலும், தனியார் பேருந்தின் நடத்துநர், SLTB பேருந்தின் சாரதியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தினசரி அதிகரித்து வரும் போக்குவரத்து விபத்துகளைத் தடுக்க, போக்குவரத்து பொலிஸார் அதிக அவதானம் செலுத்தி, குற்றவாளி சாரதிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, இத்தகைய சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

-சதீஸ்குமார்

Related posts

இன்று இரவு 10 மணி முதல் CEYPETCO / IOC விலைகள் குறைப்பு

தேயிலை தோட்டத்தில் 17 வயது யுவதியின் சடலம்: சகோதரரின் கனவர் தப்பியோட்டம்

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 36,708 பேருக்கு டெங்கு பாதிப்பு

editor