வகைப்படுத்தப்படாத

அட்டன் ரொத்தஸ் கிராமப் பாதை அமைச்சர் திகாம்பரத்தினால் திறந்து வைப்பு

(UDHAYAM, COLOMBO) – மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அட்டன் ரொத்தஸ் கிராமப் பாதை செப்பனிடப்பட்டு அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் 28.05.2017 திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் அமைச்சர் திகாம்பரத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கேற்பவே இவ்வாறு நிதியொதுக்கீடு செய்யப்பட்டு ரொத்தஸ் கிராமப் பாதை செப்பனிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமா குன்றும் குழியுமாக காணப்பட்ட இந்தப்பாதை தற்போது உரிய வகையில் செப்பனிடப்பட்டதன் காரணமாக ரொத்தஸ் மற்றும் புருட்ஹில் தோட்ட மக்கள் பெரிதும் நன்மையடைந்துள்ளனர்.

28 ஆம் திகதி இடம் பெற்ற இந்தப்பாதை திறப்பு விழாவில் அமைச்சர் திகாமபரத்துடன்  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜ் ,மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் , எம்.உதயகுமார். சிங்காரம் பொன்னையா , சரஸ்வதி சிவகுரு , முத்தையா ராம் , ஆர். ராஜாராம் , தொ. தே. சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் , நிருவாகச்செயலாளர் ஏ. நல்லுசாமி ,இளைஞரணி தலைவர் பா.சிவநேசன் , உபதலைவர் வேலு சிவானந்தன் , இயக்குநர் சதாசிவம் , அட்டன் அமைப்பாளர் ஜெஸ்டின் , மாவட்டத்தலைவர் மோகன்ராஜ்  , உட்பட முக்கியஸ்தர்களும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

Related posts

පොලිස්පතිට සහ හිටපු ආරක්ෂක ලේකම්ට එරෙහි මුලික අයිතිවාසිකම් පෙත්සම් සලකා බැලීම අද

Nightclub collapse kills two in South Korea

மட்டக்களப்பிலும் பூரண ஹர்த்தால்