சூடான செய்திகள் 1

அடையாள வேலை நிறுத்தத்தில் புகையிரத தொழிற்சங்கம்?

(UTV|COLOMBO)-எதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

தமது சம்பளப் பிரச்சினைக்கு சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக புகையிரத எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.

அதன்படி எதிர்வரும் 26ம் திகதி நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

சம்பளப் பிரச்சினை சம்பந்தமாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் இதுவர தீர்வு வழங்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

கணவரை அலவாங்கால் தாக்கி கொலை செய்த மனைவி

கோட்டாபய ராஜபக்ச – ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச் சான்றிதழ்