உள்நாடு

அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு

அடையாள அட்டைகளை வழங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

அடையாள அட்டைகள் வழங்கும் பணி இன்று (30) வழக்கம்போல் நடைபெறும் என்று அவர் கூறினார்.

தொழில்நுட்பப் பிழை காரணமாக நேற்று (29) பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை அடையாள அட்டைகளை வழங்க முடியவில்லை என்று ஆட்பதிவு ஆணையர் நாயகம் தெரிவித்தார்.

வழங்க முடியாத அடையாள அட்டைகளை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்

சீனாவிடமிருந்து நன்கொடையாக 10 இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி

லொறியொன்று வேகக் கட்டுப்பாடை இழந்து மோதியதில் ஒருவர் பலி