மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவல்களைத் தொடர்ந்து, அடையாளம் காணப்படாத ஆண்களின் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று (29) சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
மட்டக்குளி, காக்கைதீவு கரையிலும், களனி ஆற்றின் முகத்துவாரத்திலும் இரண்டு அடையாளம் தெரியாத ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
மற்றைய ஆணின் சடலம் பமுனுகம, எபமுல்ல பகுதியில் கட்டுமானத்தில் உள்ள இரண்டு மாடி வீட்டின் பின்னால் உள்ள காணியில் கண்டெடுக்கப்பட்டது.
இறந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
