உள்நாடுகாலநிலை

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான முன்னறிவிப்பை வௌியிட்ட வளிமண்டலவியல் திணைக்களம்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கடுமையான அரசியல் பழிவாங்கல் இடம்பெறுகிறது – சஜித் பிரேமதாச

editor

சம்பிக்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

கொவிட-19 தடுப்பூசி : முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை