சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவொன்று எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்த நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கொசாக் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ புயலினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்யவும், விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கொள்கை விடயங்கள் குறித்து கலந்துரையாடவும் இந்த தூதுக்குழு நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
