சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கோடு சீயோன் திருச்சபையின் போவாஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் நேற்று (25) மாலை மாந்தை மேற்கு பிரதேச செயலளார் பிரிவில் உள்ள அடம்பன் மற்றும் ஆண்டாங்ககுள பிரதேசத்தில் இடம்பெற்றது.
சிறுவர்களை பாதுகாப்பது ஒவ்வொரு தனிநபர்களினதும், சமூகத்தினதும், அரசினதும் கடமையாகும் என்பதை கருத்தில் கொண்டு குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது.
இதன் போது போவாஸ் நிலையத்தின் பங்காளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து வீதி நாடகத்தை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்