உள்நாடு

அஜர்பைஜானில் இலங்கை மாணவிகள் மூவர் பலி

(UTV | அஜர்பைஜான்) – அஜர்பைஜான் நாட்டில் உள்ள சபைல் (Sabail) இல் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் அந்நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மாணவிகள் தங்கியிருந்த வீட்டு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, புகையை சுவாசித்தமையின் காரணமாகவே உயிரிழந்து விட்டதாக குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

21, 23, மற்றும் 25 வயதுடைய மூன்று யுவதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கான வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

எரிவாயு விலை சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்

மங்கி பொக்ஸ் தொற்று : சுகாதார துறை விசேட அறிவிப்பு!

சற்றுமுன்னர் 06 பேர் அடையாளம்