தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றத் தவறினார்களா என்பது குறித்துப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையை நிறைவேற்றத் தவறியதாகச் சில தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதற்கமைய, குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.
