உள்நாடு

அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் உண்மை வெளியானது

(UTV | இந்தியா) – இந்தியா, கோவையில் இறந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் மரணம் இயற்கையானதே என்று இந்தியாவின் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.

நிழல் உலக தாதா அங்கொட லொக்கா உடலில் விஷம் எதுவும் இல்லை என ஆய்வக பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

இவர் மாரடைப்பு காரணமாகவே இறந்ததாகவும் சிபிசிஐடி இனை மேற்கோள்காட்டி இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரேத பரிசோதனையினை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், விஷம் அல்லது வேறு ஏதும் சந்தேகத்தின் பேரில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழப்பு

வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்

editor

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒருபக்கம் ஊழியர்களின் சத்தியாகிரக போராட்டம்! மறுபுறம் நியாயம் கோரி பேரணி!!