உள்நாடு

அக்கரைப்பற்றை சேர்ந்த சித்திக் ஹாஜியார் சடலமாக மீட்பு!

(UTV | கொழும்பு) –

இறக்காமம் – வாங்காமம் பகுதியில்,அக்கறைப்பற்றைச் சேர்ந்த சித்திக் ஹாஜியார் என்ற நபர் (63 ) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் தனது ஆட்டுப்பண்ணைக்கு சென்ற அவர் காணாமல் போயிருந்த நிலையிலயே இன்று காலை அவரின் ஜனாசா வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

இவரிடம் வேலை செய்த நபர்களிடம் 75 ஆடுகள் உள்ள பண்ணையில் 17 ஆடுகளை மாத்திரம் அவதானித்த அவர் இதனை பற்றி வினவியபோது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாத தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் 21 மற்றும் 19 வயது இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்குச் சட்டம் தளர்வு

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்!